இந்தியா-
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இமாச்சல் பிரதேச காங். முதல்வர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இமாச்சல்பிரதேசத்தில் காங். கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக வீரபத்திரசிங் உள்ளார்.
தலைநகர் ஷிம்லாவில் உள்ள இவரது வீடு, அலுவலங்களில் இன்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் 18 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
கடந்த ஜுன் மாதம் வீரபத்திரசிங் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இன்று ரெய்டு நடந்தது. 11 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சி.பி.ஐ. ரெய்டால் வீரபத்திரசிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
என்ன வழக்குகள்:
கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் வீரபத்திரசிங், இவர் மீதும், மனைவி பிரதீபா சிங், மகன் விக்ரமாதித்யாசிங் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, டில்லி ஐகோர்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கினை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரப்படுத்தி ரெய்டு நடத்தியுள்ளனர்.dinamalar
