ஏ.எஸ்.எம்.ஜாவித்,இன்பாஸ் ஸலாஹுதீன்-
விடியல் இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட ரமழான் வினா விடை போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பு – 09, தெமட்டக்கொடை இல. 18 ஸ்ரீ தர்மராம வீதியிலுள்ள பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாசார நிலையத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
நிலையத்தின் பணிப்பாளரான அஷ்ஷெய்க் எஸ்.எல்.நௌபர் (கபூரி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பிரதம அதிதியாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.முபாரக் (கபூரி) கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன், புரவலர் ஹாசீம் உமர், வைத்திய கலாநிதி தாசீம் அஹமட், சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், ஊடகவியலாளர்களான எம்.பி.எம்.பைரூஸ், எம்.சீ ரஸ்மின் மற்றும் ஜெம்ஸீத் அஸீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் முதலாம் பரிசாக 25,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 15,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாயும் ஆறுதல் பரிசுகளாக ஆறு பேருக்கு தலா 5,000 ரூபாயும் வழங்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக குறித்த ஒன்பது வெற்றியாளர்களுக்கும் பெறுமதிமிக்க சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றியாளர்களின் விபரம்:
சையாப் பாரூக் - காலி (முதலாம் பரிசு)
அன்பாஸ் மஹ்மூத் - வவுனியா (இரண்டாம் பரிசு)
முஸ்தாக் சிஹாப்தீன் - உடதலவின்ன (மூன்றாம் பரிசு)
ஆமினா காதர் - கொழும்பு (ஆறுதல் பரிசு)
அல்தாப் சாபி - களுத்துறை (ஆறுதல் பரிசு)
புர்கான் தாஹீர் - திருகோணமலை (ஆறுதல் பரிசு)
ஜினான் அல்சஹ்ரி - வடல்கும்புர (ஆறுதல் பரிசு)
சஹீர் ஹாபீல் - வாழைச்சேனை (ஆறுதல் பரிசு)
முஹம்மட் மிஸ்காத் - அடுள்கம (ஆறுதல் பரிசு)







