தாஜூடீன், மரணமாவதற்கு முன்னர் பயன்படுத்திய கைத்தொலைபேசி மீட்பு...!

சந்தேகத்துக்குரிய மரணத்தை தழுவிய, ரக்பீ வீரர் வசிம் தாஜூடீன், மரணமாவதற்கு முன்னர் பயன்படுத்திய கைத்தொலைபேசி நுவரெலியா, அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளார் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு தாஜூடீன் கொழும்பில் வைத்து விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் அந்த மரணம் விபத்தால் அல்ல. கொலை என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் குறித்த காலத்தில் நாரஹேன்பிட்டியில் உள்ள விருந்தினர் உபசரிப்பு நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் தமது மகனுக்கு தாஜூடீன் பயன்படுத்திய தொலைபேசியை வழங்கியுள்ளார்.

எனினும் அவருக்கு தாஜூடீனின் தொலைபேசி எவ்வாறு கிடைத்தது என்று விடயம் வெளியாகவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -