தூக்கிலிடுங்கள் அவனை...!


தூக்கிலிடுங்கள் அவனை......

புத்தி கெட்ட மனிதனே - உன் 
காமம் தலைக்கேறி 
கண் கெட்ட பூஜை உன்னால் 
பச்சிளம் பாலகனையும் 
பாலுணர்வால் நாசம் செய்கிறாய் 


குற்றமறிந்திடாக் குழந்தையினை 
உயர் செல்வமாய்ப் பார்த்திடாது 
உன் குறுகிய போதைக்காய் 
சீரழித்துச் சிதைத்து - நீ 
சாதித்திருப்பதுதான் என்ன...??


நாசமானவனே சுற்றுமுற்றும் பார் 
சுவர்கள் பல இருக்கிறது 
அதில் தேய்த்தேனும் 
தீர்த்துக்கொள் உன் காமப்பசியை 
கலாச்சாரச் சீர்கேடும் 
சமுகத்தின் கவனயீனமும் - உனை 
காமத்திற்கு தூண்டியிருந்தால் 
உன் ஆறாம் அறிவு மங்கிவிட்டதா???


வாளத்தகுதியற்ற மானிடன் நீ..
உனை தூக்கிலிடுவதைத் தவிர 
எத்தண்டனையும் ஈடாகாது 
படைத்தவன் கூட மன்னித்திடமாட்டான் 

சமுகத்தலைமைகளே...
சமுகம் காக்கப்பட வேண்டுமென்றால் 
இவ்வாறானவர்களை மன்னிக்காது 
சந்தியில் நிறுத்தி தூக்கிலிடுங்கள் - மீண்டும் 
முனைபவன் விழித்துக்கொள்வான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -