எம்.எம்.ஜபீர்-
கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் எதிர்வரும் 2015.09.22 செவ்வாய்க்கிழமை காலை 8.30க்கு திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை தவிசாளர் கலபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த எம்.ஐ.எம்.மன்சூர் பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அம்பாறை மாவட்டத்தில் அடுத்த நிலையில் இருந்த சம்மாந்துறை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.எல்.எம்.மாஹிர் புதிய உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்
சம்மாந்துறையில் அண்மையில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஐ.எல்.எம்.மாஹிரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் பிரகடணம் செய்யப்பட்டதுடன் கடந்த பொது தேர்தலில் முன்பாக கன்டியில் நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஐ.எல்.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
இதனைடிப்படையில் தேர்தலுக்கு முன்பே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஐ.எல்.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
