யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸார் வீதி ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க தவறுபவர்களை தண்டிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகனங்களில் சாரதிகளாக ஆண் அல்லது பெண் இருந்தால் இவ்விருவரில் போக்குவரத்து விதி முறையை மீறும் ஆண்களே தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
ஆனால் இதில் இருந்து பெண்களை தவறு செய்தாலும் போக்குவரத்து பொலிஸார் அவர்களுடன் சிநேக பூர்வமாக உரையாடி விடுவிப்பதை காணமுடிகின்றது.
இவ்வாறு விடுவிப்பதனால் மென்மேலும் விபத்துக்கள் அதிகரிப்பதை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர்.
எனவே போக்குவரத்து பொலிஸாரின் பணியினை கண்காணிக்க உயர் பொலிஸ் அதிகாரிகள் முன்வர வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
