நாபீர் பௌன்டேசன் சுகாதார பிரதி அமைச்சரிடம் முன்வைக்கும் கோரிக்கை...!

எம்.வை.அமீர்-

லத்த எதிர்பார்ப்புகளுடன் அம்பாறை மாவட்டத்தில் வாக்களித்த மக்களின் அபிலாசைகளை தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளமன்ற உறுப்பினர்கள் நிவர்த்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் நாபீர் பௌன்டேசனின் தலைவர், நிர்மாண முகாமைத்துவ முதுமாணி அல் ஹாஜ் யூ.கே.நாபீர்.

அம்பாறை மாவட்ட மக்களின் நீண்டகால தேவைகளை உடன் நிவர்த்திக்கப்பட வேண்டும். அம்பாறை மாவட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளமன்ற உறுப்பினர்கள் அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள துறைகளைச் சார்ந்த அமைச்சுக்களுக்கு ஊடாகவாவது உடனடியாக தங்களது சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்று நாபீர் பௌன்டேசனின் தலைவர், நிர்மாண முகாமைத்துவ முதுமாணி அல் ஹாஜ் யூ.கே.நாபீர், ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரதி அமைச்சரான பைசால் காசிம் அவர்கள் அம்பாறை மாவட்டம் எங்கும் நிறைந்து காணப்படும் வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டும் என்றும், கடந்த தேர்தலில் பேசப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வேலைகள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் காணப்படும் குறைகளையும் விசேடமாக அம்பாறை கரையோர பிரதேசத்துக்கு ஒசுசல மருந்து விநியோகிக்கும் நிலையம் ஒன்றை உடனடியாக சாய்ந்தமருது அல்லது கல்முனையில் நிறுவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் வர்களும் விரைந்து செயற்பட்டு விளையாட்டு துறையை நமது பகுதியில் உயர் நிலைக்குக் கொண்டுவர உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒசுசல மருந்து விநியோகிக்கும் நிலையம் ஒன்றை அமைப்பதன் ஊடாக வசதி குறைந்த நோயாளிகள் தங்களது மருந்துப்பொருட்களை வாங்கிக்கொள்ள வசதியாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -