கம்பஹா, கொட்டதெனிய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் காணொளி போன்றவைகளை ஒளிப்பரப்ப தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தடைவிதித்துள்ளது.
காணாமல்போன ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை, குழந்தையின் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் வயற்பிரதேசம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஊடகங்கள் வெளிப்படுத்துவதனை நிறுத்த வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி மேலாளர் எதிரிவீரா குணசேகர, நிர்வாண உடல் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன சமூகவலைத் தளங்களில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்கவும், இத்தகைய விடயங்களில் மீண்டும் ஈடுபடாமல் இருக்குமாறு ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
