சிவகார்த்திகேயனுக்கு அப்படி என்ன சொன்னார் அஜித்..?

மிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான “அஜீத்தை சந்தித்தது மற்றும் அவரிடம் பேசியது ஆகியவை எனது வாழ்க்கையை மாற்றிய தருணங்கள்” என்று இளம் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

ஒரு அன்பான சகோதரன் அல்லது அப்பா என்னருகில் இருந்து எனது முதுகில் தட்டிக் கொடுத்தது போன்று அவரின் வார்த்தைகள் எனக்கு உற்சாகம் கொடுத்தன.
நான் அவரைச் சந்தித்து பேசியது பற்றி இதுவரை நான் யாரிடமும் தெரிவித்தது இல்லை, ஏனெனில் அது ஒரு இலவச விளம்பரம் போன்று ஆகிவிடக்கூடாது.

நாங்கள் சந்தித்துப் பேசியபோது மிகவும் குறைவான நேரம் மட்டுமே நாங்கள் சினிமாவைப் பற்றி விவாதித்தோம். அவர் எனக்கு எந்தவித அறிவுரையும் வழங்கவில்லை.

அவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். நான் ஒரு மிகப்பெரிய நடிகரைச் சந்தித்தேன் என்று கூறுவதைவிட நல்ல ஒரு மனிதனை சந்தித்தேன் என்றுதான் கூறவேண்டும்.

அவரைச் சந்தித்த பின்பு எனது வாழ்க்கை மாறியது போன்று உணர்கிறேன்” என்று அஜீத்தை சந்தித்த தருணத்தைப் பற்றி உருகிக் கரைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அஜீத்தோட பிரியாணி பத்தி ஒண்ணுமே சொல்லலையே?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -