இக்பால் அலி-
நான் இரண்டாவது முறையாகுவும் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சராக கடமையேற்றதன் பின்னர் நான் பிறந்த மண்ணில் முதல் தடவையாக கலந்து கொள்ளும் முதல் வைபவமாகும். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகின்றது.
முஸ்லிம் சமயம் கலாசார அமைச்சின் பணியை முதலாவதாக என்னுடைய ஊரிலிருந்து அதுவும் இந்த தாருல் உலூம் மீஸானிய்யா அரபுக் கல்லூரியிலிருந்தே ஆரம்பித்து வைக்கக் கிடைத்தமையிட்டு இதனை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
உலக முஸ்லிம் லீக் அமைப்பின் ஏற்பாட்டில் அரபு கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 10 வதிவிடக்கருத்தரங்கில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ. கலிலுர்ரஹ்மான் தலைமையில் 05-09-2015 நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் மற்றும் தபால்துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இன்று நாடு பூராக நூற்றுக் கணக்கான அரபுக் கல்லூரிகள் இருந்த போதிலும் கூட சுமார் 23 வருட காலத்தில் இந்த மீஸானிய்யா அரபுக் கல்லூரியின் வளர்ச்சியைப் பார்க்கின்ற போது எம் எல்லோரையும் பிரமிக்கச் செய்துள்ளது. இந்த குறுகிய காலத்தில் சுமார் 135 ஹாபிழ்களையும், 70 மார்க்க அறிஞர்களையும் உருவாக்கியுள்ள இந்தக் கல்லூரி காலத்திற்கு ஏற்றவாறு மார்க்க ஆன்மீகக் கல்வியை மட்டுமன்றி பொதுக் கல்வியையும் கற்பித்து வருவதன் மூலம் மாணவர்கள் பலதுறைகளிலும் உயர் தகைமைய அடைந்து கொள்கின்றார்கள். அது மட்டுமன்றி இன்றைய நவீன உலகிற்கு ஏற்ப கணனி நெறி கற்றைத் துறை போன்வற்றிலும் கற்பதற்கு இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது.
எல்லாவற்றையும் விட இந்த அரபுக் கல்லூரி சர்வதேச மட்டத்தில் விசேடமாக மதீனா இஸ்லாமிய பலக்லைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது இக்கல்லூரியில் பயிலும் உலமாக்களுக்கு முக்கிய வரப்பிரகாசமாக அமைந்துள்ளது எனக் கருதுகின்றேன். இந்த வாய்ப்பினை இந்தக் கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவனும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
எதிர்காலத்தில் இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் எமக்கு தலை சிறந்த உலமாக்களை எமது ஊர்pல் அமைந்துள்ள இந்த மீஸானிய்யா அரபுக் கல்லூரி உருவாக்க முடியும் என்ற நிலைமை இருப்பதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே இந்த அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவனும் தான் கற்ற கல்வியை அழகான முறையில் மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும். இதுவே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.
விசேடமாக என்னுடைய தந்தை மௌலவி ஹாசிம் பற்றி இங்கு குறிப்பிட்டார்கள். என்னுடைய தந்தையாரும் மீஸான் ஹாஜியாரும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்கள். மீஸான் ஹாஜியார் பற்றி நாங்கள் சிறு பராயம் முதல் அறியக் கூடியதாக இருந்தது. மிக முக்கியமாக ஏழை மக்களின் வாழ்வை மேன்மையடையச் செய்த ஒருவராக அவர் இருக்கிறார்.
அவர் அன்றைய காலகட்டத்தில் இந்த கட்டடத்தை ஆரம்பித்து வைத்த போது ஒரு சில பிரச்சினைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டது என்றாலும் கூட மீஸான் ஹாஜியார்களின் புதலவர்;கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆரம்பித்து வைத்து தொடராக நடத்திச் செல்கின்றார்கள். இந்த நாட்டின் பல பாகங்களிலுள்ள மக்களின் பிள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தை வழங்கும் வகையில் அவர்கள் ஆற்றுகின்ற மகத்தான பணியை உண்மையில் பாராட்டாமல் இருக்க முடியாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சவூதி அரேபிய்யா உலக முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் கலாநிதி அப்துர்ரஹ்மான் சயீத் அல் ஹாசிமி உரையாற்றும் போது ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமிய அமைப்பு பொறுத்த வரையில் மக்காவில் இருந்து கொண்டு முழு உலகத்திலும் வருடாந்தம் இவ்வாறான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.
அந்த தொடரிலே இலங்கையிலும் சில காலத்திற்கு முற்பாடு ஒரு கருத்தரங்க நடத்தப்பட்டது. தற்பொழுது இந்தக் கல்லூரியிலேயே நடாத்தப்பட்டு இருக்கிறது. வருங்காலத்திலே முயற்சிகள் செய்யப்படும் பொழுது இது போன்ற கருத்தரங்குகள் இலங்கையிலும் நடாத்தப்படும்.
முஸ்லிம் சமூகத்ததைப் பொறுத்த வரையிலே ஒரு நடுத்தரமான சமூகம். அவர்கள் ஒற்றுமையாக இருக்கும் பொழுது நிறையச் சாதிக்க முடியும். அந்த வகையிலே இலங்கையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கின்றார்கள். இலங்கையிலுள்ள அரபு கல்லூரிகளிலே குர்ஆன் ஹதீஸ் இவ்வாறு இஸ்லாமியக் கலைகள் படித்துக் கொடுக்கப்படுகிறது. உலமாக்கள் ஆர்வத்துடன் இதனைப் படிக்கிறார்கள்.
இதுவொரு இஸ்லாமிய விழிப்பாடுகளுடைய வெளிப்பாடாகும். இந்த சந்தர்ப்பத்திலே புதிதாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் நான் வேண்டிக் கொள்ள வேண்டி முக்கியமான விடயம் அவர் இங்கு இருந்து கொண்டு அவர் அமைச்சு ஊடாக ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமி மக்காவிலுள்ள உலக முஸ்லிம் லீக்குடன் தொடர்பை வைத்து அதன் மூலமாக பல சாதிப்புகளை , பல பயன்பாடுகளை பெற்றுக் கொள்ள முடியும் அவர் தொடர்ச்சியாக அந்த உறவைப் பேணிக் கொள்ள வேண்டும் படி அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். நாம் அதற்கு உதவி செய்வதற்கு தயாராக இருக்கிறோம்..
இந்தக் கல்லூரியன் முக்கியஸ்தரான இஹ்திசான் மீஸான் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த கல்லூரியின் மாணவர்கள் செயற்திறனைப் பார்க்கின்ற போது இந்தக் கல்லூர்p எதிhகாலத்தில் பல்கலைக்கழகமாக உருவாவுதற்கான நம்பிக்கை புலப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உலக முஸ்லிம் லீக் அமைப்பின் முக்கியஸ்தர்களான மக்கா உம்முல் குரா பல்கலைக்கழக சட்டத் துறைப் பேராசிரியர் கலாநிதி பஹ்த் அப்துல்லா அல் உரைனி, சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூவராயலய முதல் செயலாளர் சாலிஹ் சாஈத் அஸ் சுலைமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இக்பால் அலி





