இன்று அல்கிம்மா நிறுவனத்தின் தலைவர் அஷ்-ஷெய்க் அபூ-ஹுஸாம் அவர்கள் கல்முனைப்பிரதேசத்திற்கு வருகை தந்ததோடு கல்முனை மாநகர எல்லைக்குள் புனித பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுவதற்கு அல்கிம்மா நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட பொறுப்பாளர் முன்னால் அமைச்சர் ஏ.ஆர் .மன்சூரின் புதல்வரும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கிமீன் இணைப்புச்செயலாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் இல்லத்தில் 100 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு குர்பான் பங்குகள் வழங்கப்பட்டதோடு , 200 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்களும் வழங்கப்பட்டதோடு இதுவரை அல்கிம்மா நிறுவனத்தினால் எமது பிரதேசத்தில் 1000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது .குறிப்பிடத்தக்கது .





