நல்லாட்சி அரசாங்கம் சிங்கள பௌத்தாகளை உதாசீனம் செய்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதி செய்வதில் அர்ப்பணிப்பை காண்பிக்கும் போதும், பெரும்பான்மை சமூகத்தை கண்டு கொள்வதில்லை.மதகுருக்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் வித்தியாசமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது.
எமது அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தாது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது.
குளிரூட்டப்பட்ட அறைகளில் அமைச்சர்களின் தோள்களில் கைபோட்டு சம்பாசனை செய்யும் பௌத்தப பிக்குகளுடன் நல்லிணக்கம் பற்றி பேசுவது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
கிருலப்பனை போதி மந்திரயவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
