ரகர் வீரர் வசிம் தாஜூடீனின் உடல் பாகங்களைக் காணவில்லை

கர் வீரர் வசிம் தாஜூடீனின் உடல் பாகங்களைக் காணவில்லை என புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வசீம் தாஜூடீனின் சடலத்திலிருந்து முன்னதாக பெற்றுக்கொள்ளப்பட்ட உடல் பாகங்களைக் காணவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் தெரிவித்துள்ளனர்.

தாஜூடீனின் சடலத்தை முதலில் பிரேதப் பரிசோதைனக்கு உட்படுத்திய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர, உடல் பாகங்களை குளிரூட்டியில் சேமித்து வைத்திருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், உடல் பாகங்களை ஒப்படைத்தமை குறித்து எவ்வித ஆவணங்களும் இல்லாத காரணத்தினால் உடல் பாகங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி நாரஹேன்பிட்டிய சாலிகா வீதியில் வாகனமொன்றில் எரியுண்ட நிலையில் தாஜூடீனின் சடலம் மீட்கப்பட்டது.

முன்னதாக இந்த மரணம் ஓர் விபத்து என விசாரணைகளின் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது இந்த மரணம் ஓர் திட்டமிட்ட கொலை என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக பிரேதப் பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரியிடம் சடலத்தின் எக்ஸ்ரே படம் இருப்பதாகவும் இதனை புதிதாக பிரேதப் பரிசோதனை செய்யும் குழுவிடம் ஒப்படைக்குமாறும் தற்போதைய சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன் கோரியுள்ளார்.

எக்ஸ்ரே படம் மற்றும் முன்னதாக பரிசோதனைக்கு உட்படுத்திய உடற் பாகங்கள் பற்றிய தரவுகளையும் உள்ளடக்கியே இறுதி அறிக்கையை தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார் என புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக முன்னதாக பிரேதப் பரிசோதனை நடத்திய வைத்தியர் குழாமில் அங்கம் வகித்த டாக்டர் ராஜகுரு, உடற் பாகங்களை பாதுகாப்பாக பேணுமாறு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிடம் கோரியிருந்தார் என புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -