இலங்கை அகதிகள் முகாமில் மூன்று வயது குழந்தையின் தாய் தீக்குளித்து தற்கொலை..!

மிழகத்தின் திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், மூன்று வயது குழந்தையின் தாய் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி இலங்கை தமிழர்களான இவர்களுக்கு, கடந்த, நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்தநிலையில், ராமஜெயம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த ரூசாமிலி, வீட்டில் தனியாக இருந்தபோது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் காப்பாற்றும் முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இதனால், ரூசாமிலி, தீயில் கருகி பரிதாபமாக இறந்தார், 

இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
த/ன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -