மூதூரில் தையல் இயந்திரங்களை வழங்கி வைப்பு..!

அபூ அப்துல்லாஹ்-

பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்துவதற்காக அரபிக் கல்லூரி வீதி , இக்பால் வீதி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இரண்டு தையல் பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டு இப் பயிற்சி நெறியானது ஆறு மாதங்களை கொண்டதாகவும் பயிற்சியை பூர்த்தி செய்த யுவதியளுக்கு தையல் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச சபை உறுப்பினரும், லங்கா அசோக் லேய்லேன்ட் நிறுவனத்தின் பனிப்பாளர் அஷ்-ஷெய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும்,அ.இ.மக்கள் காங்கிரஸ் திருமலை மாவட்ட நிறைவேற்று சபை தலைவருமான டாக்டர் திடீர் தௌபீக் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இப் பயிற்சி நிலையமானது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்கள் அணுசரனை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் தலைமை தாங்கிய ஜஸ்ரி ஜவாப்தீன் உரையாற்றுகையில் கடந்த காலங்களில் சமூகத்தில் குறைந்த வருமாணங்களை பெரும் குடும்பங்களில் உள்ள யுவதிகளை தெரிவு செய்து மூதூர், கிண்ணியா, புல்மூட்டை போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதாக சுமார் 400 யுவதியளுக்கு சுயதொழில்களை மேம்படுத்த தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பயிற்சி நெறிகளை வழங்கியுள்ளோம். 

இங்கு உங்களுக்கு வழங்குகின்ற தையல் இயந்திரங்களைக் கொண்டு தங்களது சுய தொழில்களை வழர்த்துக் கொள்வதோடு, நீங்களும் சமூகத்திற்கு பயனுள்ள சுய தொழிலாளர்களை உறுவாக்க வேண்டும் என கோட்டுக்கொண்டார். 

எமது சமூகத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளாத இளைஞர் , யுவதியளுக்கு சுயதொழிலோடு சேர்த்து தொழில் நுட்பம் சார் திறனையும் வழங்குவதற்கு தீர்மாணித்துள்ளோம் இந்த சமூகப் பணியில் கைகோர்து செயற்பட தங்களது ஆணையை வேண்டி நிற்கின்றோம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -