பிரதமர் மோடி ஆடை அணியும் விதம் இந்தியா மட்டுமின்றி உலகநாடுகள் மத்தியிலும் ஒருஈர்ப்பை ஏற்படுத்திஉள்ளது. ஆனால் ‘டிரஸ்சிங் ஸ்டைல்’ தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், நான் ஆடை வடிவமைப்பாளர் ஒன்றும் வைக்கவில்லையே என்று கூறிஉள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். குழந்தைகள் பிரதமர் மோடி உடை அலங்காரத்தில் தனிஉணர்வு கொண்டு உள்ளார் என்றும் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களின் போது அவருடைய உடை அலங்காரமானது இந்திய ஆடைகளுக்கு ஒரு தூதராக உள்ளது என்றும் பாராட்டினர். இதற்கு விளக்கம் அளித்துபேசிய பிரதமர் மோடி, “நான் ஆடை வடிவமைப்பாளர் வைத்து உள்ளேன் என்பது ஒரு வதந்தியாகும். நான் சாதாரண முறையிலே ஆடை அணிகிறேன்.” என்று கூறினார்.
பிரதமர் மோடியின் குர்தாவானது மிகவும் பிரபலமாகிவிட்டது. இதுகுறித்து நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? என்று குழந்தைகள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில், “நான் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்துவந்தவன்... குஜராத்தில் குளிராக இருக்காது... எனவே நான் குர்தா-பைஜாமா அணிந்தேன். என்னுடைய ஆடைகளை நானே துவைத்துக் கொள்வேன், முழுசட்டையானது துவைப்பதற்கு அதிகநேரம் எடுத்துக் கொள்ளும். எனவே முழுசட்டையை கட் செய்து நான் குர்தாவாக அணிந்துக் கொள்கிறேன். இது என்னுடைய பணியை எளிதாக்குகிறது எனவே நான் சாட் குர்தாவை அணிந்துக் கொள்கிறேன்.” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
மேலே அணியும் சட்டையானது தற்போது “மோடி-குர்தா” என்றே பிரபலமாகி உள்ளது, ஆளும் கட்சியில் உள்ள வல்லூநர்களும் தற்போது இதுபோன்ற ஆடைகளை அணிவதை காணமுடிகிறது. 64 வயதாகும் பிரதமர் மோடி இளைஞர் பெருமக்களுக்கு சில குறிப்புகளை வழங்கிஉள்ளார். “என்னுடைய ஆடைகள் மிகவும் நேர்த்தியாக இருக்குமாறு தைத்து கொள்கிறேன். என்னுடைய துணியை சலவைக்கு போடுவதற்கு என்னிடம் காசு இருந்தது கிடையாது, என்னுடைய ஆடைகளை நானே தேய்த்துக் கொள்வேன்,” என்று கூறினார்.
பிரதமர் தனது காலணி குறித்தும் பேசினார். “பள்ளி முடிந்தது, சாக்பிஸ்-களை சேகரித்து வருவேன், அதனை என்னுடைய காலணியின் மீது தேய்த்து வெண்மையாக்குவேன். இவை அனைத்தையும் செய்தது நான்தான். எனக்கு பேஷன் டிசைனர்கள் யாரும் கிடையாது. நாம் மிகவும் நேர்த்தியாகவும், விழாவிற்கு ஏற்றப்படியும் ஆடைகளை அணியவேண்டும்,” என்று கூறினார்.
