இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி, ஜா-எல பகுதியிலுள்ள நகை கடையொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பணிபுரிந்த இரண்டு பெண்களை கத்தி முனையால் மிரட்டி, அங்கிருந்த 6 இலட்சம் ரூபாய் பணத்தையும் 53,760,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். எனினும், இவ்வாறு கொள்ளையடித்தவர்களின் அடையாளம், நகைக்கடைக்கும் அருகில் இருந்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.கமராவில் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு தற்போது நகைக்கடை உரிமையாளரும் பொலிஸாரும் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வழங்கப்பட்டுள்ள புகைப்படத்திலுள்ளவர்களை இனங்கண்டு அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தகவல் தரவேண்டிய அலைபேசி இலக்கங்கள்:
சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் - 071-8591589
உதவி பொலிஸ்மா அதிபர்- களனி- 071-8591594
பொலிஸ் ஊடகப்பிரிவு -011-2327227
ஜா-எல பொலிஸ் நிலையம்- 011-2236222, 011-2239131
ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி -071-8591603
குற்றப்பலனாய்வு தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி -078-538291
த.மி.