மூன்று மொழிகளின் முக்கியதுவத்தை மறைந்த தலைவர் அஸ்ரப் அறிவுருத்தினார் - சட்டத்தரணி கபூர்

- நிந்தவூரில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் -

முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்த்தாபகத்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மூன்று மொழிகளையும் கற்றரியவேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்தார். அதன் தாப்பரியத்தை அறிந்து எமது சமூகம் எதிர்காலத்தில் இந்நாட்டில் தலை நிமிந்து நிற்பதற்கு இம் மும்மொழி அறிவு அவசியமென அறிவுறுத்தினார் என தெரிவித்தார் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபப் பொதுச் செயலாளரும், மஜிலிஸ் ஸூராவின் பிரதித் தலைவருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள். 

மறைந்த தலைவரின் 15ஆவது வருடாந்த நினைவுகூறும் நிகழ்வும் துஆ பிராத்தனையும் நிந்தவூர் பிரதேச சபை மண்டபவத்தில் சுகாதாரஇ சுதேச பிரதி அமைச்சரும் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாப் பைசல் காசிம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் விசேட சிறப்பு பேச்சாளாராக கலந்து கொண்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது. 

மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் பல்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற ஒருவராக காணப்பட்டார் எனவும் குறிப்பாக அரசியல் , கலை, இலக்கியம் எழுத்துத்துறை, பேச்சித்துறை, சமூகநலன் மார்க அறிவு, மற்றவர்களை மதிக்கும் மனப்பான்மைகொண்ட குணாஅம்சங்களையும் விஷேட தகைமைகளையும் அவர் கொண்டிருந்தார் எனவும் தெரிவித்தார். 

1980ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் அரசியல், கட்சியாக நாம் ஆரம்பித்த போது இந்நாட்டில் வாழும் அத்தனை அரசியல் அனாதைகளின்; அடையாளத்தை அறிமுகப்படுத்துவது அவசியம் எனவும்; அவர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படும் போது அவர்களுக்காக உரத்த குரலில் துனிந்து நின்று மற்றவர்களுக்காக பேசி வந்தார் குறிப்பாக முஸ்லிம்களின் அரசியல் விடிவுக்காகவும் விழிப்பூட்டுவதற்காகவும் படாத பாடு பட்டார்.

அன்னார் உயர் கல்வியின் சிறப்பை உளரீதியாக உனர்ந்ததன் காரனமாகத்தான் தென் கிழக்கு பல்கலைக்களகம் ஒன்றை நிறுவி பலரும் பயன்பெறவேன்டும் என்ற என்னத்ததைக்கொன்டவராகத் திகழ்ந்தார். 

இன்னாரின் மறைவுக்குப்பின் எமது கட்சியின் தலைமைப்பெறுப்பை மிகவும் காத்திரமாகவும் கச்சிதமாகவும் தியாக அற்பனிப்புகளுக்கும் பல சவால்களுக்கும் மத்தியில் எங்களின் தேசியத்தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் மிகவும் சிறப்பாகவும் மறைந்த தலைவர் கன்ட அரசியல் அதிகாரக்கணவுகளை நனவாக்கிக்கொன்டு இந்நாட்டில் எல்லோரையும் அரவனைத்து செயல்ப்பட்டுவருவது ஓரு சிறப்பம்சமாகும் எனவும் சட்டத்தரணி கபூர் குறிப்பிடடார். இந் நிகழ்வில் மறைந்த தலைவருக்காக அல்-குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டு விசேட துஆ பிராத்தனையும் இறுதியில் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -