சவூதி அரேபியா ஊடகத்துறை அமைச்சின் அழைப்பின் பேரில் மக்காவுக்கு ஊடகவியலாளர்கள் விஜயம்...!

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சரின் பரிந்தரையின் கீழ் சவூதி அரேபியா முஸ்லிம் கலாசார அலுவலகள் மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சின் அழைப்பின் பேரில் மக்காவுக்கு விஜயம் செய்துள்ள நான்கு ஊடகவியாளர்கள அங்குள்ள ஊடக மத்திய நிலையத்தில் இருந்து தம் சேவைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இலங்கை தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவு பணிப்பாளர் யூ. எல். யாகூப், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் சீனத்துல் சியாமா, முஸ்லிம் சமயம் கலாசார அமைச்சரின் ஊடகத்துறை செயலாளர் ரசி ஹாசிம் , இக்பால் அலி ஆகியோர் பல்வேறு உலக நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள ஊடகவியலாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதோடு புனித உம்ரா ஹஜ் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேவேளை இவர்களுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை பணிப்பாளர் எஸ். ஏல். ஹனிபா அவர்களும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இணைந்துள்ளார்.

மக்காவிலிருந்து இக்பால் அலி


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -