அஸ்ரப் ஏ சமத்-
கிராமிய பொருளாதார பிரதியமைச்சா் அமீா் அலி மட்டக்களப்பு மாவட்டத்தில் கருவாச்சேனை, மருதநகா் போன்ற தமிழ் கிராமங்களுக்கு விஜயம் செய்து தனக்கு கடந்த தோ்தலில் வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
இங்கு அவா் கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லீம் தமிழ் கிராமங்கள் அனைத்தையும் சமபங்கோடு அபிவிருத்தி செய்வதாக அங்கு தெரிவித்தாா்.
ஜனாதிபதி மற்றும் பிரதமமந்திரி ரணில் ஆகியோரினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள பிரதியமைச்சா் பதவி வறுமைகக் கோட்டில் வாழும் கிராமங்களை கட்டியெழுப்பும் அமைச்சாகும். ஆகவே தங்களை பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. சுயதொழில் முயா்ச்சி, பயிா்ச்செய்கை கால்நடை வளா்ப்பு போன்ற பல திட்டங்களை மட்டக்களப்பில் செயல்படுத்துவேன், என பிரதியமைச்சா் அமீா் அலி அங்கு உரையாற்றினாா்.



