இராணுவத்திற்கு ஆணையிட்டோருக்கு தண்டனை வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ள நிலையில், விடுதலை புலிகளுடன் ஒட்டி உறவாடி அவர்களின் உத்தரவின் பிரகாரம் அரசியல் செய்த இரா.சம்பந்தன், எம். ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெறும் கைப்பொம்மையாவார். அவரை பின்னாலிருந்து இயக்குவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாவார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத் தின் போது மனித உரிமை மீறலாக கருதப்பட்டவை ஆட்சி மாற்றத்தின் பின்னராக மாயமாய் மறைந்துள்ளதா? இது இலங்கை யை ஆக்கிரமிக்க நினைக்கும் மேலைத்தேய நாடுகளின் தந்திரமாகும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேர வை இலங்கையில் நடந்தவை யுத்தக் குற் றம் என்பதனை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கை இராணுவம் தொட ர்பில் ஐ.நா வின் அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்கிய ஆதராங்களை மாத்திரம் சாட்சியாக கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தயாரிப்பதற்கு இலங்கையர்களிடமிருந்து எந்தவொரு சாட்சியும் சமர்பிக்கப்படவுமில்லை. இலங்கை நீதிமன்றத் தில் இது குறித்தான எந்தவொரு முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. இராணுவத்தினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால் இது குறித்து இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கவேண்டும். ஆனாலும் இது குறித்து குறைந்தளவிலான முறைப்பாடுகளே பதிவாகியுள்ளன.
ஆகவே இது புலம்பெயர்ந்த தமிழர்களின் சாட்சியங்களாகும். விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போரின் போது பாரியளவில் இலங்கை இராணுவம் சிவில் மக்களுக்கு அநியாயம் செய்ததாகவும் பாலியல் வன்முறைகள் அதிகளவில் இடம்பெற்ற தாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹுசேன் அறி க்கை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கை மிகவும் பக்கச்சார்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இராணுவதின் மனித உரிமை மீறல்கள் மாத்திரமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே ஒழிய விடுத லைப் புலிகள் அமைப்பினால் இழைக்கப்பட்ட அநியாயங்கள் தொடர்பில் குறைந்த அளவிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிள் அட்டகாசம் தொடர்பில் சர்வதேசம் கண்டுகொள்ளவி ல்லை. அது மாத்திரமன்றி ஐக்கிய நாடுகளின் அறிக்கைக்கு எந்தவொரு சாட்சியாளர்களின் பெயர்களையும் குறிப்பிடவில்லை. இந்த அறிக்கை தயாரிப்பதற்கு எங்கிருந்து சாட்சிகள் கிடைக்கப்பெற்றன. இது தொடர்பில் எந்தவொரு தெளிவும் இல்லை.
புலம்பெயர்ந்த அமைப்பினரால் வழங்கப்பட்டவைகளை சாட்சியாக ஏற்றுக் கொண்டு ஐக்கிய நாடுகள் இந்த அறிக்கை யை தயாரித்துள்ளது. இது முற்றிலும் பொய்யாகும்.இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டதன் பிரகாரம் இராணுவத்திற்கு உத்தரவிட்டோருக்கே தண்டனை வழங்குவதாயின், தமிழீழ விடு தலைப் புலிகளுடன் ஒட்டி உறவாடி அவர்களின் உத்தரவிற்கு அமைய அரசியல் செய்த இரா. சம்பந்தன், எம். சுமந்திரன், அடைக்கலநாதன் ஆகியோருக்கும் தண்டனை பெற் றுக்கொடுக்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெறும் கைப்பொம்மையாவார். அவரை பின்னாலிருந்து இயக்குவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாவார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது மனித உரிமை மீறலாக கருதப்பட் டவை ஆட்சி மாற்றத்தின் பின்னராக மாய மாய் மறைந்துள்ளதா? இது இலங்கையை ஆக்கிரமிக்க நினைக்கும் மேலைத்தேய நாடுகளின் தந்திரமாகும் என்றார்.
