எம்.எம்.ஜபீர்-
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திலிருந்து சவளக்கடை பிரதேசத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு வந்த மூன்று பசு மாடுகளையும், மூன்று பசுக் கன்றுகளையும், இவற்றைக் கொண்டு வந்த இருவரையும் நேற்று மாலை 15ஆம் கொளனி கஞ்சா வீதியில் வைத்து சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக நற்பிட்டிமுனையை சேர்ந்த ஒருவரும், 15ஆம் கொளியை சேர்ந்த ஓருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாடுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட மாடுகளையும், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களையும் கல்முனை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

