க.கிஷாந்தன்-
தலவாக்கலை லோகி தோட்டத்தின் பிரிவில் ஒன்றான மிட்டில் டிவிசன் நல்ல நீர் வளம் கொண்ட தோட்டமாகும். இங்கு குடியிருப்பை சுற்றி காணப்படுவது வனப்பகுதியாகும் இப்பகுதியில் அதிகமான நீர் ஊற்றுகள் காணப்படுகின்றது.
இங்கு வாழும் சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு நாளும் பாவனைக்கு உதவாத நீரைபெற்றுகொண்டு பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வன பகுதியில் இருந்து சுமார் 3000 ம் மீற்றர் தெலைவில் இருந்தே நீர் குழாய்கள் மூலம் இம்மக்களுக்கு நீர் கொண்டு வரப்படுகின்றது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள நிர்தாங்கிகள் மிகவும் மோசமான நிலையில் பாதுகாப்பு அற்று உடைந்து சுத்தம் செய்யப்படாத நிலையில் சேரும் சகதியுமாக காணப்படுகின்றது.
இதேவேளை நீர் தாங்கிகளில் மேற்பகுதிகளில் பாதுகாப்பு மூடிகள் போடப்படாமல் விலங்குகள் மற்றும் பறவைகளின் கழிவுகளும் விழுந்து கிடப்பதாகவும் இந்நீரை பருகுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
மழை காலங்களில் தண்ணீர் சேரும் சகதியுமாக மஞ்சல் நிறத்துடன் கலந்து கலங்கி வருவதால் இத்தோட்ட மக்கள் சுத்தமான நீரை பெற்றுகொள்வதில் பல இடர்களை சந்திக்கின்றனர்.
அத்தோடு நீரை வடிகட்டி குடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வேறு வழியின்றி இந்த நீரையே குடிக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த நீரை பருகுவதால் சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் அனைவரும் பல சிரமங்களை சந்திப்பதாகவும் அடிக்கடி அறிப்பு நோய் வருகின்றதாகவும் எவ்வளவுதான் வடிக்கட்டி பார்த்தாலும் மணல் மற்றும் மிருகங்களில் கழிவுகளும் நீரில் வருகின்றது எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
சில நேரங்களில் பாம்பு குட்டிகள் நீர் தாங்கியில் செத்துகிடப்பதாகவும் தண்ணீர் குழாய்கள் மிகவும் மோசமான நிலையில் உடைந்து காணப்படுவதாகவும் மழைக்காலங்களில் தண்ணீர் பெறுவதில் சிரமங்கள் உள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.



