மத்திய பிரதேசத்தில் பிறந்து ஒருமாதமே ஆன குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்ட மருத்துவமனையில் ஒருமாத குழந்தையின் மூக்கை எலி கடித்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றி நர்சு மற்றும் குழந்தையை பார்த்துக் கொள்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். குழந்தையின் மூக்கை எலி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக கடித்து உள்ளது. ஆனால் இச்சம்பவமானது நேற்றுதான் வெளியே தெரியவந்து உள்ளது. இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
குழந்தை 45 நாட்களுக்கு முன்னதாக தனியார் மருத்துவமனையில் பிறந்து உள்ளது. பின்னர் குழந்தையின் நிலையானது மோசமானதை தொடர்ந்து மாவட்ட மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்று உள்ளனர். பின்னர் அவர்களிடம் குழந்தை காட்டப்படவில்லை.
குழந்தை குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது குழந்தையின் மூக்கை எலி கடித்துஉள்ளது. இதனையடுத்து மருத்துவமனை அதிகாரி பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார். பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
ஆந்திர பிரதேசம் மாநிலம் குண்டூர் அரசுமருத்துவமனையில் பிறந்து 10-நாட்கள் ஆன குழந்தையானது எலிகடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதுபோன்று மற்றொரு சம்பவம் நடைபெற்று உள்ளது.
