எம்.ஐ.நௌசாத் -
எகோ நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஹெண்டிகெப் இன்டர்நெசனல் நிறுவனத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட இணையத்தினுடன் இணைந்து அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பொத்துவில், பாணம, காரைதீவு, நிந்தவூர், நாவிதன்வெளி சம்மாந்துறை, தெகியத்த கண்டிய , தமன, அம்பாறை டவுன், உகன மற்றும் மகாஓயா பகுதிகளில் இருந்து மூவின மக்களையும் உள்வாங்கி 257 பயனாளிகளைத் தெரிவு செய்து மாதாந்தம் 4800.00 ரூபா வீதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் நலிவுற்ற மக்களுக்கு 03 மாதத்துக்கான திட்டம் ஒன்றை மேற்கொண்டது.
அந்தவகையில் 04.09.2015 ம் திகதி வெள்ளிக்கிழமையன்று இத்திட்டத்தின் இறுதி சந்திப்பும் - பிரயாவிடை நிகழ்வும் அம்பாறை மாவட்ட இணையத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஹெண்டிகெப் நிறுவனத்தின் திட்டஉத்தியோகத்தர்கள் மற்றும் இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் இத்திட்டத்தின் கள இணைப்பாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் ஹெண்டிகெப் அமைப்பினால் இணையத்திற்கு குழு நியாபகச் சின்னமும் கள இணைப்பாளர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.








