குறித்த நபர் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் புனித இஸ்லத்தை தன் மார்க்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
இஸ்லாத்தை தழுவிய பின்னர் பெரும்பான்மை இனத்தவரின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வந்த நிலையில் தன் தாயின் (சிங்களம்) வீட்டிலேயே தங்கி இருந்தார்,
எனினும் மார்க்க வழிபாடுகளில் மிக பேணுதலாகவும் இருந்து வந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற குர்பானி கடமைகளிலும் இவர் பங்குபற்றி தன்னால் இயன்ற பணிகளை செய்துள்ளார்.
இதனிடையே இவரின் ஜனாசாவை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அப்பகுதி பிக்குமார்கள் சம்மதம் தெரிவித்துள்ள போதும், அதனை பெளத்த மத முறைப்படியே அடக்கம் செய்ய வேண்டுமென அப்பகுதி அரச அதிகாரி ஒருவர் வற்புறுத்தி வருவதாகவும் அறிய கிடைக்கிறது.
முழுமையான விபரம் கிடைத்ததும் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம்
முஹமட் பாயிஸின் நல்லமல்கள் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு மேன்மை மிக்க மறுமை வாழ்வு கிடைக்க உங்களோடு நாமும் பிரார்த்திக்கின்றோம்.
அல்மஷூறா-

