கடந்த 33 ஆண்டுகளிற்குப் பின்னர் தோன்றும் ஒரு விசேட சந்திரக் கிரகணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் இன்று கிடைத்துள்ளது. பூமிக்கு மிக அருகே தெரியும் நிலவு கிரகணத்திற்குள் உட்படுவதையே இரத்த நிலா என்று அழைக்கின்றார்கள்.
குறிப்பாக செப்டம்பர் மாத இறுதியில் இவ்வாறு பூமிக்கு அண்மையான பாதையில் முழுநிலாவாகத் தெரிவதை “அறுவடை நிலா” என்று அழைப்பார்கள். ஆதிகாலத்தில் விவசாயிகள் இந்த நிலா வெளிச்சத்தையே நம்பி தங்களது அறுவடைகளை ஆரம்பிப்பார்கள்.
இந்த நிலா சாதாரான நிலாவிலும் விட 30 வீதம் பிரகாசமானதாக இருப்பதால் இரவு வேளைகளிலும் அறுவடை செய்வதாலே இந்த நிலா “அறுவடை நிலா” என அழைக்கப்படும். இந்த நிலா கிரகணத்திற்குள் அகப்படும் தன்மை மிகவும் அரிது. இனி இவ்வாறான நிகழ்வு 2033ல் இடம்பெறப்போகின்றது.
எனவே இதனை பார்க்க விரும்புபவர்கள் வட-அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டத்தில் இருந்தால் சாதாரணமாகப் பார்க்க முடியும். கண்களிற்கான எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை. ரொறன்ரோ நேரப்படி இந்த நிகழ்வு இரவு 8.10 மணிக்கு ஆரம்பித்து சுமார் நான்கு மணித்தியாலங்களிற்கு இந்த நிகழ்வு தெரிந்தாலும் ரொறன்ரோ நேரம் இரவு 10.11 மணியிலிருந்து 11.23 மணி வரை இந்த சந்திரக்கிரகத்தை மக்கள் பார்க்கலாம். ஏனைய மக்களும் இந்த நேர அலகினை தங்களது நாட்டின் நேர அலகுடன் ஒப்பிட்டு இந்த நிகழ்வை பார்க்க முடியும்.
இந்தக் கிரகணம் சுமார் ரொறன்ரோ நேரம் 10.11 மணியிலிருந்து ஒரு மணித்தியாலம் பதினைத்து நிமிடங்கள் இடம்பெறும். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியாவில் வாழ்பவர்கள் இந்த நிகழ்வைப் பார்ப்பதற்கு அமெரிக்காவின் வின்வெளி இணையத்தளமான நாசா இணைப்பில் http://www.ustream.tv/channel/nasa-msfc இதனை நேரடியாப் பார்க்க முடியும்.
இலங்கை நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 5.41 மணிக்கு இந்த நிகழ்வை இணையத் தளமூடாகப் பார்க்க முடியும். இவ்வாறு பார்க்க விரும்புபவர்கள் இந்த இணையத்தளத்துடன் ரொறன்ரோ நேரப்படி இரவு 8.10ற்கு தொடர்பை ஏற்படுத்துவது அவர்கள் விரும்பியவாரு இந்த சந்திரக்கிரகணத்தை நேரடியாகப் பார்ப்பதற்கு வழிவகுக்கும்.
