தேசிய மற்றும் சர்வதேசம் கலந்த விசேட நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் பரிந்துரை செய்திருப்பது இலங்கையின் சட்டத்திற்கு செய்த அவமானம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச தனது பேஷ்புக் வலைத்தள கணக்கில் செய்துள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.
2002 – 2011 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இந்த விசேட நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் சட்ட கட்டமைப்பானது எவ்வித சர்வதேச தலையீடுகளும் இன்றி எந்த விதத்திலான விசாரணைகளையும் நடத்தவல்லது என்பது எனது நம்பிக்கை.
இலங்கையின் சட்ட கட்டமைப்பும், நீதிமன்ற கட்டமைப்பும் எப்படியான விசாரணைகளையும் நடத்தக் கூடிய வசதிகளையும் திறமையான மனித வளங்களையும் கொண்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இந்த பரிந்துரையானது, இலங்கைக்கு எதிரான சர்வதேச தரப்பினரின் இரட்டை நிலைப்பாட்டுக்கான மற்றுமொரு சிற்நத உதாரணம் மாத்திரமே என்பது எனது நம்பிக்கை எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
