‘தியாகத் திருநாள்’ மாபெரும் கவியரங்கு நிகழ்வு..!

பி. முஹாஜிரீன்-

ஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் எற்பாட்டில் ‘தியாகத் திருநாள்’ மாபெரும் கவியரங்கு நிகழ்வு 25.09.2015 (வெள்ளிக்கிழமை) பி.ப 03.00 மணிக்கு பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் தலைவர் கலாபூஷணம் மாறன் யூ செயின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகவும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பத்வாக் குழச் செயலாளர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஸிம் சூரி மதனி கௌரவ அதிதியாகவும், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் விசேட அதிதியகவும் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.எம்.ஹனீபா, அல்ஹிதாயா வித்தியாலய அதிபர் கே.எல். உபைதுல்லா, இப்னு சீனா கனிஷ்ட வித்தியாலய அதிபர் எம். சாகிர் ஹுஸைன் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கலாபூஷணம் பாலமுனை பாறூக் தலைமையில் ‘தியாகத் திருநாள்’ கவிரங்கு நடைபெறவுள்ளது. இதில் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன், கலாபூஷணம் ஏ.எல். இஸ்மாலெவ்வை, கலாபூஷணம் கே.எம்.ஏ அஸீஸ், கலாமணி மக்கீன் ஹாஜி, கவிஞர் விஜிலி, கவிஞர் ரியாஸ் குராணா, கலாரத்தின சுல்பிகா ஷெரீப், கவிதாயினி பர்ஸானா றியாஸ் ஆகியோர் கவிதை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் கவிஞர்களான பாலமுனை முஹா, கலைப்பிறை ஜே. வஹாப்தீன், எழுகவி எம்.யூ.எம். ஜெலீல், பாலமுனை முபீத், வாழைச்சேனை றம்சியா ஆகியோர் கவிப் பொழிவு நிகழ்த்தவுள்ளனர். 

இந்நிகழ்வில் கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஊடக இணைப்பாளர் எம்.ஐ.எம். நாளிர் கேட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -