பயங்கர அமைதியில் அட்டாளைச்சேனை...!

ட்டாளைச்சேனைப் பிரதேசம் பயங்கர, மயான அமைதியில் தேசியத்தலைவரினால் 25வருடங்களுக்குப்பிறகு பகிரங்கமாக, தேசிய ரீதியில் எல்லா மேடைகளிலும் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அமுலாக்கத்திற்கான நிஜ அறிவிப்பினை ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்து நிற்கின்றது.

தலைமையின் ஆணையை சிரமேற்கொண்டு மூவருக்கும் வாக்களித்து 3 தொகுதிகளையும் சமமாக வெல்ல வைத்து வழமையான தியாகத்துடன் வரலாறு படைத்துவிட்டு, தலைவரின் சன்மான அறிவித்தலை பொறுமையோடும,; நம்பி;க்கையோடும் எதிர்பார்த்திருக்கும் மண்...........

30 வருடகால மு.கா.அரசியலில் சிகர அர்ப்பணிப்புகளுடன் முதன்மை பெற்றாலும் இன்னும் அரசியல் அதிகாரமற்று வஞ்சிக்கப்பட்ட மண். வந்தோர்களை யெல்லாம் சமுதாய நோக்கில் வாழவைத்து அவர்களின் முக்கூட்டு அடுப்புகள் எரிவதற்கு விறகுக்கட்டைகளாக பாவிக்கப்பட்ட மண். ஊர்வாத அபிவிருத்தி அரசியலினால் புறக்கணிக்கப்பட்டு மேய்ச்சல் தரையாக மட்டும் பெயரெடுத்த மண்...........

மு.கா.வின் இதயம் அம்பாரை மாவட்டத்திற்கு அதிகாரங்கள் பல வழங்கப்பட்டாலும் கழியோடைக்கு அப்பால் அட்டாளைச்சேனையின் கதை சத்தியமாக 'பழைய குருடி கதவைத் திறடிதான். இது எமக்கு அசைக்கமுடியாத 25 வருடகால கசப்பான அரசியல் அனுபவமாகும்...........

தொடர்ந்தும் உங்களுக்கு ஏமாற்றும் ஏளனமும்தான் என அதாவும் உதுமானும் நையாண்டியில். தேசியப்பட்டியில் இம்முறையும் நழுவிப்போகாதா?என கழுகுப் பார்வையில் கணக்குப் போடும் யானையும், மயிலும் மறுபுறத்தில்..... 

எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஊரையே பிடித்து விடலாம் என வட்டம் போடும் றிசாத்..... அத்தனைக்கும் மத்தியில் தலைவரின் அறிவிப்பை எதிர்பார்த்து விரக்தியும், ஏக்கமும் ஏமாற்றமும் கலந்த நடைப்பிணங்களாக மு.கா.வின் அப்பாவிப் போராளி மக்கள்.........

யதார்த்தமான, களநிலவர உண்மை என்னவென்றால் கட்சியின் தேசியப்பட்டியல் சவால்கள் இம்முறை அட்டாளைச் சேனையில்தான்.......... தலைவர் இம்முறை, கட்சியைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழல் அட்டாளைச் சேனையில்தான் ,....... 

தலைவர் உறுதிபடக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றி தேசியத் தலைமையின் கண்ணியத்தையும் நாணயம், நன்மதிப்பினையும் சமூகத்தில் பாதுகாத்து இறைவனுக்கும் பதில் சொல்லியாகவேண்டிய 'அமானிதப் பொறுப்பும் அட்டாளைச் சேனையில்தான் விஷ்வரூப மெடுத்திருக்கின்றது......... 

அட்டாளைச்சேனையின் இத்துணை சவால் வேறெங்கும் எழ முடியாது. அத்தனையும் சரியாக நடந்து தலைமையும், கட்சியும், மக்களின் நம்பிக்கைகளும் இன்ஷா அல்லாஹ் பாதுகாக்கப்படல் வேண்டுமென்ற அங்கலாய்ப்பில், இறைஞ்சுதல்களுடன் அட்டாளைச்சேனை மு.கா. போராளிகள். 'யா அல்லாஹ் அட்டாளைச்சேனைக்கு வாக்களிக்கப் பட்ட அரசியல் அதிகாரத்தை மசூறா அடிப்படையில் தகுதியான, நன்குபடித்த, கட்சிக்கு அர்ப்பணிப்புகள் பலசெய்து, என்றும் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக இருக்கக்கூடிய இறைபயமுள்ள சிரேஷ்ட பண்பாளருக்கு தேசியத்தலைவர் வழங்குவதற்குரிய உளத்திடத்தையும் பக்குவத்தையும் அவருக்கு வழங்குவாயாக! 

அதன் மூலம் சந்தர்ப்பவாதிகள், குழப்பவாதிகளின் சதிகளை முறியடித்து எமது மண்ணினதும் தலைமைத்துவத்தினதும் கண்ணியம், மரியாதைகளைப் பாதுகாப்பாயாக!

ஏங்கி நிற்கும் மண்ணும், மக்களும்-
அட்டாளைச்சேனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -