காரைதீவில் இடம்பெற்ற சிறுவர் விழிப்புணர்வு நிகழ்வு

சுலைமான் றாபி, றபீக் பிர்தௌஸ்-

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும், அவர்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகத்தினை தடுப்பது சம்பந்தமானவுமான விழிப்புணர்வு நிகழ்வு இன்று  (30) காலை காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் ஆரம்பமானது. 

காரைதீவு இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், காரைதீவு ராமகிரிஸ்னன் ஆண்கள் பாடசாலையின் அதிபர் ரி.யோகநாதன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி கலா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் விஜயதாஸ், உளவளத்துனையாளர்  சியானா உள்ளிட்ட அதிதிகளும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வெளியிடப்பட்ட பிள்ளைகளை உயிர் போல் காப்போம் எனும் தொனிப்பொருளிலான விஷேட துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டதோடு, பாடசாலை மாணவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -