வெளிவிவகார அமைச்சருக்கு நாமல் புத்திமதி சொல்லிக்கொடுத்தார்....!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச, சட்ட கல்லூரியின் பரீட்சை எப்படி எழுதினார் என்பது எம் அனைவருமக்கும் தெரியும் என அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ராஜபக்சவினர் காரணமாகவே இலங்கை சர்வதேசத்திற்கு மத்தியில் தரம் தாழ்ந்து போனதாக கூறுவது தவறானது எனவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கை சட்டக்கல்லூரியில் பீடாதிபதியின் அறைக்குள் இருந்தே பரீட்சைக்கு தோற்றியதாகவும் முன்கூட்டியே அவருக்கு வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாகவும் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -