உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நாளை நிந்தவூரில் நடமாடும் சேவை...!

சுலைமான் றாபி-

ம்மாதம் 07ம் திகதி முதல் 13ம் திகதி வரை நாடுமுழுவதும் செயற்படுத்தப்படவுள்ள உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு நாளை (07) நிந்தவூர் பிரதேச சபையினரால் விஷேட நடமாடும் சேவை ஒன்று நிந்தவூர் 22ம் பிரிவில் அமைந்துள்ள சுகாதார சிகிச்சை நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

காலை 9.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை இடம்பெறவுள்ள இந்நடமாடும் சேவையில் பிரதேச சபையின் கடமைகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், நீரிழிவு, இரத்த அமுக்கம், கொலஸ்ரோல் உள்ளிட்ட ஏனைய நோய்களுக்கான சிகிச்சைகளும் இந்நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எம். ஜௌபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -