கிழக்கில் நடைபெற்ற தலைவர் தின நிகழ்வுகள்....! (படங்களுடன்)


ல்முனைத் தொகுதி

ஹாசிப் யாஸீன்- ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு கல்முனைத் தொகுதியிலுள்ள பல பாடசாலைகளில் தலைவர் தின நிகழ்வுகள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் வழிகாட்டலில் நேற்று (16) புதன்கிழமை இடம்பெற்றது.
 
இதில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் இடம்பெற்ற தலைவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பற்றிய நினைவுப் பேருரையினை மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தினர்.
 
இதன்போது மாணவர்களுக்கு தங்களது வாழ்வில் முன்மாதிரியாக பின்பற்றக்கூடிய மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் ஆளுமை, தன்நம்பிக்கை, தைரியம், இராஜதந்திரம், விடாமுயற்சி, அரசியல் அதிகாரம், சமூக அக்கரை, அபிவிருத்தி அரசியல், ஆத்மீக ஈடுபாடு என்பன பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார்.
 
தலைவர் தின ஏனைய நிகழ்வுகள் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம், சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயம், கல்முனை அல்-மிஸ்பா வித்தியாலயம், கல்முனை அல்-பஹ்றியா வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா வித்தியாலயம், மருதமுனை புலவர் மணி வித்தியாலயம், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வுகளுக்கு விஷேட அதிதிகளாக கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சட்டத்தரணி எம்.ஏ.ஹாதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்ஐ.எம். பிர்தௌஸ், மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.அமீர், சட்டத்தரணி அமீருள் அன்சார் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டு மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பற்றிய நினைவுப் பேருரையினை மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தினார்கள்.






 நிந்தவூர்

சுலைமான் றாபி,றபீக் பிர்தௌஸ்- மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 15வது சிரார்த்த தினம் நேற்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது.  அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் நிந்தவூர் மத்திய குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (16) மாலை நிந்தவூர்   பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர்  பைசால் காசீம் கலந்து கொண்டதோடு, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி ஆர்.யு. அப்துல் ஜலீல்,  நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் னுச எம். ஹம்மாம், கட்சியின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.எ. கபூர்இ தென்கிழக்குப்  பல்கலைக்கழக  பதிவாளார் அப்துல் சத்தார், முன்னாள் பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எம்.எம். அன்ஸார்,   உறுப்பினர் எம்.ரி. ஜப்பார் அலி,  கல்விமான்கள், உலமாக்கள், கட்சியின் போராளிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்ததனைப் படங்களில் காணலாம்.  




சம்மாந்துறை

யு.எல்.எம். றியாஸ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரபின் 15வது வருடப் பூர்த்தியை இட்டு நினைவுப் பேருரையும்,  துவாப் பிரார்த்தனையும் சம்மாந்துறையில் இடம்பெற்றது. 

சிறி  லங்கா முஸ்லிம் காங்கிரசின் சம்மாந்துறை மத்திய குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு சம்மாந்துறை எம்.ஏ,அப்துல் மஜீத் மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. (16.09.2015) தென்கிழக்கு பலகைக் கழகத்தின் பதில் பதிவாளர் மன்சூர் ஏ.காதர் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் உலமாக்கள்,கல்விமான்கள்,அரசியற் பிரமுகர்கள், நினைவுப் பேருரைகளை வழங்கினர். அல் - ஹாஜ் மௌலவி றம்சின் காரியப்பர் விசேட துவாப் பிரார்த்தனை செய்தார். இன் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் உலமாக்கள் புத்திஜீவிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.





அக்கரைப்பற்று

எம்.ஐ.எம்.றியாஸ்- இலங்கை திருநாட்டில் பல பிரதேசங்களில் இன்று(16) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் அமைச்சருமான மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 15 ஆவது ஞாபகார்த்த வைபவங்கள் நடைபெற்றன.

அந்த வகையில் அக்கரைப்பற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்; உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குர்ஆன் மஜ்லிசும்  துஆப் பிராத்தனையும்  இன்று புதன்கிழமை(16) மாலை அக்கரைப்பற்று பதுர்நகர் அல்-மத்ரஸத்துல் பத்ரியா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது அல் - மத்ரஸத்துல் தர்கிலா அதிபரும் பட்டினப்பள்ளிவாசல் இமாம் மௌலவி ஏ.எல்.ஐயூபினால் விசேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

மர்ஹும் அஷ்ரப் அவர்கள் பற்றிய நினைவுப் பேருரையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் எம்.எம்.எம்.றிஸாம் உட்பட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கட்சியின் போராளிகள் என பலர் கலந்து கொண்டனர்.






தோப்பூர் 
ஏ.எஸ்.எம்.தாணீஸ்- சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் 15வது  ஞாபகர்த்த கத்தமுல் குர்ஆன் வைபவமும், துஆ பிரார்த்தனையும் தோப்பூர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோப்பூர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவர் என்.நாஹூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச கட்சியின் போராளிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கத்தமுல் குர்ஆன் வைபவத்தையும்,துஆ பிரார்த்தனையும் கட்சியின் திருகோணமலை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி எஸ்.எம்.றிஸ்வான்(நஜாஹி) முன்னிருந்து நடாத்தி வைத்தார்.

ஓவ்வொரு வருடமும் இவ்வாறு கத்தமுல் குர்ஆன் வைபவமும், துஆ பிரார்த்தனையும் தோப்பூர்  பிரதேசத்தில் மறைந்த தலைவருக்காக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.




பாலமுனை 

பி. முஹாஜிரீன்- மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரபின் 15வது ஞாபகார்த்த தின நிகழ்வு நேற்று (16) பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத் தலைவர் அல்ஹாஜ் என்.ரி. அப்துல் காதர், மத்திய குழுச் செயலாளர் ஆசிரியர் ஐ.எல்.எம். பாயிஸ், மத்திய குழுவின் பொருளாளர் ஆசிரியர் எம்.எம். ஜெமீல் உட்பட மத்திய குழுவின் உறுப்பினர்களான அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஐ.எல். கலீலுர் றகுமான், எம். ஹனீபா, எஸ். சித்தீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மர்ஹ_ம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் தொடர்பான நினைவுரையை ஆசிரியர் பி. முஹாஜிரீன், ஏ.எம். பைசால் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழவில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.




இறக்காமம் 
அபு அலா, எஸ்.ஏ.சன்ஸீர்- இறக்காமம் மத்திய குழுவின் ஏற்பாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 15வது ஞாககார்த்த தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை (17) இறக்காமம் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
 
மத்திய குழுவின் அமைப்பாளர் எஸ்.எல்.நிசார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக பிரதித் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான முஸ்லிம் முழக்கம் அப்துல் மஜீட் ஆகியோர் பிரதம பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.
 
பிரதம பேச்சாளர்களாக கலந்துகொண்டவர்களில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக பிரதித் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான முஸ்லிம் முழக்கம் அப்துல் மஜீட் ஆகியோரினால் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய விஷேட உரையை நிகழ்த்தினர்.
 
கத்தமுல் குர்ஆன் தமாமைத் தொடர்ந்து மௌலவி ஏ.எச்.றசீடினால் விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.எல்.முஸ்மி, எம்.எஸ்.ஜெமில் காரியப்பர், யூ.எல்.ஜப்ரி, கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.றியாஸ் மற்றும் மார்க்கத் தலைவர்களும், கல்விமான்கள் உள்ளிட்ட பல கட்சிப் போராளிகளும் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -