ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை வரவுள்ளார்!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிவில் மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகள் சந்திப்பின் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் இலங்கை செல்லவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சந்திப்பின் போது ச.வி. கிருபாகரன் அவர்களால், இலங்கை போர்க்குற்ற விவகாரம், மற்றும் இலங்கை தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் வினா எழுப்பப்பட்ட போது, ஐ.நா. அலுவலக ஆணையாளரின் பேச்சாளர் அதற்கு பதிலளிக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் சார்பில் பேசவல்ல முக்கிய அதிகாரியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பது உறுதியான போதிலும் எப்போது இலங்கை செல்லவுள்ளார் என உறுதிப்படுத்தப்படவில்லை. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -