க.கிஷாந்தன்-
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் அட்டன் மல்லியப்பூ சந்தியில் உள்ள தபாற்பெட்டியினுள் காணப்பட்ட குளவிக்கூடு நீண்ட நாட்களின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக குறித்த தபாற்பெட்டியில் குளவிக் கூடு காணப்பட்டதால் கடிதங்களை அனுப்புவதற்கு பிரதேச மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.
அட்டன் தபால் நிலைய பிரதான பொறுப்பதிகாரி தலைமையில் குளவிக் கூட்டை அகற்றுவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அது பயனளிக்கவில்லை.
இந்த நிலையில் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அட்டன் நகரிலுள்ள தனது நண்பரது வீடடிற்கு சென்றிருந்த நிலையில் அவரது உதவியுடன் இந்த குளவிக்கூடு 04.09.2015 அன்று வெள்ளிக்கிழமை பகல் பிரதேச வாசிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அகற்றப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தபாற்பெட்டியில் இருந்து அகற்றப்பட்ட தேன்கூட்டிலிருந்து 3 போத்தல்களுக்கு தேன் பெறப்பட்டுள்ளது.





