எம்.ஜே.எம். முஜாஹித்-
மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணரவுக் கருத்தரங்கு திருக்கோவில் கல்வி வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணரவுக் கருத்தரங்கு திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் அவர்களின் தலைமையில் வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய மனித உரிமைகள் பணிமனை இணைப்பாளர் ஜனாப் ஏ.எல். இஸ்ஸடீன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு மனித உரிமைகள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பாக விளக்கமழித்தார்.
இதன் போது உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. கே. பிரபாகரன், திருமதி. நோணிதா சுதாகரன் மற்றும் கல்விமான்கள் உட்பட உயரதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.




