அக்கரைப்பற்று கல்வி அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்..!

எம்.ஐ.எம்.றியாஸ்-
க்கரைப்பற்று பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் அக்கரைப்பற்று ரீ.எப்.சீ.ஹோட்டலில் நேற்று இரவு(29) நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.அஹமட்லெவ்வை ஏ.எச்.பௌஸ் உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.லாபீர் விரிவுரையாளர்களான மௌலவி எம்.எச்.முனாஸ் எஸ்.எம்.அலீப் அக்கரைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.இக்பால் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சீ.அப்துல் ஹையூ உட்பட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் சட்டத்தரணிகள் துரை சார்ந்த உத்தியோகத்தர்கள் பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அக்கரைப்பற்று பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இப்பிரதேசத்தில் கல்வி அபிவிருத்தியை மென்மேலும் விருத்தி செய்யும் வண்ணம் ஒன்பது பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டன. இதன் தலைவராக ஓய்வு பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீமும் இதன் செயலாளராக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் எம்.எம்.தையாரும் இதன் தவிசாளராக ஓய்வு பெற்ற அதிபர் ஏ.அப்துல் அஸீஸ் உட்பட ஆறு பேர்கள் உறுப்பினர்களாகவும் சபையில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -