எம்.எம்.ஜபீர்-
உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு “பிள்ளைகளை உயிர் போல் காப்போம்” எனும் தொனிப் பொருளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இன்று நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனடிப்படையில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மத்தியமுகாம் நகரில் இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது. மத்தியமுகாம் சமூர்த்தி வங்கியின் முன்பாக ஆரம்பித்த பேரணி மத்தியமுகாம் நகர் ஊடாக பொலிஸ் நிலையத்தை சென்றடைந்து மீண்டும் சமூர்த்தி வங்கியை வந்தடைந்தது.
இதன்போது மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பெறுப்பதிகாரி ஏ.எச்.எம்.எல்.அபயரத்தின, மத்தியமுகாம் பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு பெறுப்பதிகாரி வீ.ஜீ.பத்மசிறி, நாவிதன்வெளி பிரதேச சிறுவர் நன்னடைத்தை உத்தியோகத்தர் எஸ்.மயூரன், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோர்கள் பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பாக விளிப்பூட்டல் துண்டும் பிரசுரங்கள், ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டனர்.







