கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று காலை சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் கூடியது. இதன்போது எதிர்கட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அணியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் அமீர் TA மற்றும் சந்திரகாந்தன் (பிள்ளையான்) அணியைச் சேர்ந்த இனியபாரதி ஆகியோர் ஆளும் கட்சியின் பக்கம் இணைந்து கொண்டனர்.
இது சம்மந்தமாக நீங்கள் இணையும் எண்ணத்தில் இருக்கிறீர்களா..? என்று கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய எம்.எஸ்.உதுமாலெப்பையிடம் இம்போட்மிரர் செய்தியாளர் வினவியபோது:
நாங்கள் அனைவரும் ஆளும்கட்சியில்தான் இருக்கிறோம். இது தேசிய அரசாங்கம் எனவே நானும் மாறலாம். அதனைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன் விரைவில் மாற்றங்கள் இடம்பெறலாம் என்று இம்போட்மிரர் செய்தியாளரிடம் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -