வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டு சிறந்த சேவையினை மக்களுக்கு வழங்க வேண்டும் -உதுமாலெப்பை

சலீம் றமீஸ்-

கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டு சிறந்த சுகாதார சேவையினை மக்களுக்கு வழங்க கிழக்கு மாகாண சபை திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை
கிழக்கு மாகாணத்தில் வாழும் நமது மக்களின் சுகாதார தேவையை நிறைவேற்றக் கூடிய வகையில் நமது வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டு நமது மக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதற்கு கிழக்கு மாகாண சபை திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் திரு.நிஹால் கலப்பதி தலைமையில் இன்று நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.ராஜேந்திரனால் திருக்கோவில் வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனை மீது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்...

திருக்கோவில் வைத்தியசாலை தமிழ் மக்கள் அங்கு வாழ்வதால் தமிழ் மக்களுக்கு மாத்திரம் சேவை செய்யும் வைத்தியசாலை என நாம் யாரும் தவறாக நினைத்து விடக் கூடாது, பொத்துவில், கோமாரி, தாண்டியடி, காஞ்ஞின குடா ,விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில், , தம்பட்டை கிராம மக்களுக்கான வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் இவ்வைத்தியசாலை பெரிதும் பணி புரிந்து வருகின்றது. சென்ற மாகாண சபை ஆட்சிக்காலத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அவர்களினால் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக்கு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு இவ்வைத்தியசாலையை தரமுயரத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் கடந்த 03 தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழ்நிலைகளால் கிழக்கில் வாழும் மூவின மக்களும் பல கஷ்டங்களை அனுபவித்தோம். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்களின் சுகாதார சேவையினை பெற்று வருகின்றனர். அன்றைய காலகட்டத்திலிருந்து இன்று வரை மட்டக்களப்பு வைத்தியசாலை நமது மக்களுக்கான சுகாதார சேவையினை சிறப்பாக வழங்கி வருகின்றது, இன்றைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேசங்களிலும் சனத்தொகை அதிகரிக்கப்பட்ட நிலை உருவாகி உள்ளதனால் நமது மக்களுக்கான வைத்தியசாலைகள் தரம் உயர்த்தப்பட்டு சகல வளங்களுடனும் இயங்க வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 03 தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக நாம் சுதந்திரமான முறையில் வைத்தியசாலைகளுக்குச் சென்று சுகாதார சேவையினை பெறமுடியாத நிலமை நமக்கு ஏற்பட்டது. அன்றைய சூழ்நிலையில் அரசியல் அதிகாரம் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களும் , சிங்கள அரசியல் தலைவர்களும் தங்களின் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களின் பிரசேத மக்களின் நலன் கருதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலமை ஏற்பட்டது என்பது யதார்த்தமான உண்மையாகும். நாம் நமது கடந்த கால நிகழ்வுகளை புரட்டிப்பார்த்;தால் எல்லா சமூகங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரதேசங்களில் அபிவிருத்திப்பணிகள் நடைபெறாமல் இருந்தன.இதற்கு யுத்த சூழ் நிலையும் ஒரு பிரதான காரணமாக இருந்தது என்பதையும் நாம் மறந்து விடமுடியாது. தற்போதைய நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி நாம் தமிழ் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி கிழக்கு மாகாணத்தில் இன ஐக்கியத்துடன் நாம் தொடர்ந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை நமது கிழக்கு மாகாண சபை முன்னெடுக்க வேண்டுமெனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -