ஹிஜ்ரி 1436 இன்று புனித துல் – ஹிஜ்ஜா மாத தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை ஹஜ் பெருநாள் தினமாகவும் 23ஆம் திகதி புதன்கிழமை அரபா தினமுமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரகடணப்படுத்தியுள்ளது.
புனித துல் – ஹிஜ்ஜா மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் பல பாகங்களில் புனித துல் – ஹிஜ்ஜா மாத தலைப்பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
