க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நோர்வூட் காட்டுப்பகுதியில் வாழ்ந்த குரங்குகள் தமது வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உண்டு விட்டு செல்வதாகவும், அத்தோடு நோர்வூட் வெஞ்சர் பகுதியில் பிரதான வீதிகளில் செல்வதனால் பெரும் அட்டகாசம் செய்வதனால் வீதிகளில் நடமாட சிரமமாக உள்ளதாக மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனினும் உணவு பொருட்களை பாதுகாக்க முடியாத போவதுடன் சிறிய குழந்தைகளை முற்றத்தில் விளையாட விடவும் பயமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சமைத்த மற்றும் சமைக்காத உணவுப் பொருட்களை இவை எடுத்து செல்வதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். தமது உழைப்பில் கிடைக்கும் வருமானம் தமது பிள்ளைகளுக்கு சிறந்த உணவுகளை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் உள்ள உணவையும் இவை பெற்று செல்வதால் தாம் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதாக இவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இந்த குரங்குகளின் தொகை தினமும் அதிகரிப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.