எம்.வை.அமீர் -
வெளிநாட்டில் தொழில்புரியும் உயர்நிலை பதவி வகிப்போருக்கும் தீர்வையற்ற வாகனம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார், நாபீர் பௌன்டேசனின் தலைவரும் நிர்மாணத்துறை முதுமாணியுமான அல்ஹாஜ் உதுமாங்கண்டு நாபீர்.
இலங்கைக்கு தேசிய வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் வழிகளில் வெளிநாட்டில் தொழில்புரியும் சுமார் 20 லட்சம் பேரின் உழைப்பு என்பது மிகப்பிரதானமானதாகும். ஆனால் குறித்த இந்த பணம் புரட்டிக்கொடுக்கும் இயந்திரங்கள் இயந்திரங்களாகவே நோக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தினால் இவர்கள் தொடர்பில் பாரிய கரிசணை காட்டப்படுவதில்லை.
நாட்டில் நல்லாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் தொழில்புரியும் சுமார் 20 லட்சம் பேரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படவேண்டும் என்றும், இலங்கையில் பணிபுரியும் உயர்நிலை உத்தியோகத்தர்களுக்கு தீர்வையற்ற விதத்தில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது போல் வெளிநாட்டில் தொழில்புரியும் உயர்நிலை உத்தியோகத்தர்களுக்கும் தீர்வையற்ற விதத்தில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் நாபீர் பௌன்டேசனின் தலைவரும் நிர்மாணத்துறை முதுமாணியுமான அல்ஹாஜ் உதுமாங்கண்டு நாபீர்.
அதேவேளை வெளிநாடுகளில் பணிபுரியும் ஏனைய தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் நல்லாட்சியை மேற்கொள்ளும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
