அபுஅலா -
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டின் கீழ் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திவிநெகும பயநுகரியின் 2015 ஆண்டின் திவிநெகும உற்பத்திக் கண்காட்சியும், விற்பனையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை பாலமுனை துறைமுக கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றது.
உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உற்பத்திக் கண்காட்சியையும், விற்பனையையும் ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, திவிநெகும மாவட்ட பணிப்பாளர் யூ.பி.எஸ்.அனுர பிரியதாஸ, அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் கலீல் றஹ்மான், திவிநெகும முகாமையாளர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 32 கிராம சேவகர் பிரிவுகளிலுமிருந்து சுமார் 70 திவிநெகும உற்பத்தி பயநுகரிகள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் 5 பயநுகரிகள் தங்களின் உற்பத்திகளை மிகத்திறன்பட செய்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த உற்பத்தியாளர்கள் என்ற தகுதிகளை பெற்று அவர்களுக்கான ஞாபகச் சின்னத்தையும், பரிசில்களையும் இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது மும் மதங்களையும் கௌரவிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.








