என்.எம்.அமீன் -
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்களால் 5ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கிரிக்பெஸ்ட் 2015 அணிக்கு அறுவர் கொண்ட திறந்த கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இத்தொடரில் கிண்ணத்தை சுவீகரிக்கும் அணிக்கு வெற்றிக் கேடயத்துடன் 50 000 ரூபாவும், இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு 25000 ரூபாவும், 3ஆவது இடத்தைப் பெறும் அணிக்கு 7500 ரூபாவும் பணப்பரிசாக வழங்ப்படவுள்ளன.
அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக அணிகள்,ஏனைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து பங்குபற்றும் அணிகள் மற்றும் வெளி அணிகள் இப்@பாட்டியில் பங்குபெற முடியும்.
மேலதிக விபரங்களுக்கு www.facebook.com/colombocricfest சென்று இணையத்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது உங்களுடைய அணிகளை பதிவு செய்வதற்கு கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
அஸீம் அமீன் 0773629999, ருச்சிர அயேஷ்மன்த 07154289914, வருண பதிரகே 0755050785
