எனது எதிர்கல அரசியலை ரிசாட் பதியுதீனே முடிவெடுக்க வேண்டும் - திடீர் தெளபீக்

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
மூதூர் பிரதேச மக்களின் அரசியல் அபிலாசைகள் வென்றெடுக்கப்பட்ட வேண்டும் என்பதற்காகவும் ஒரு வருடகாலமாக அமரிக்காவில் இருந்த நான் எனது மகளின் திருமனத்தை கூட ஒழுங்கான முறையில் நிறைவு செய்யாமல் அரசியல் அனாதைகளாக காணப்படும் மூதூர் மக்களுக்கு இம்முறை அரசியல் விமோர்சனம் கிடைக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு மூதூர் மக்களின் விடிவிற்காக இலங்கை வந்தேன். ஆனால் மூதூர் மக்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரனை வளர்ப்பதற்காக காலாகாலமாக செய்த உயிர்த்தியாகங்கள், கஸ்டங்கள் என்பவற்றை கட்சியும், தலைமையும் புறக்கணித்து சின்ன தெளபீக்கினை எம்.பி ஆக்க வேண்டும் என்பதற்காக எனக்கு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு வழங்க மறுத்தனர்.

ஆனால் என்னுடைய என்னங்கள் எல்லாம் காலாகாலமாக என்னை மதித்துவருக்கின்ற மூதூர் மக்களுக்கு இம்முறை அரசியல் அதிகாரம் மூலம் விமோர்சனம் கிடைக்க வேண்டும் என்பதே முக்கியமாக தென்பட்டது. அதன் அடிபடையில் எப்படியாவது எனது மூதூர் மக்களை பிரதி நித்தித்துவப்படுத்துக்கின்ற பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தனுடன் மூதூர் மக்களின் வாக்குகளை உங்கள் கட்சிக்கு பெற்றுத்தரும் பட்சத்தில் அதற்காக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை மூதூர் மக்களுக்கு தரவேண்டும் என்பது சம்பந்தமாக கலந்துரையாடலில் ஈடுப்பட்டு அதிலும் நம்பிகையுடன் இருந்தோம். 

அவர்களும் யாழ்பாணத்தில் உள்ள அவர்களின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து விட்டு முடிவுக்கு வருக்கின்றோம் என்ற வாக்குறுதியும் இறுதியில் காணல் நீராகிவிட மூதூர் மக்களின் எதிர்கால அரசியலினை கருத்தில் கொண்டு அமைச்சர் ரிசாட் பதுடீன் உதவியினை நாடினேன்.

அமைச்சர் ரிசாட் பதுர்டீன் 1990ம் ஆண்டு கொடிய யுத்தத்தின் காரணமாக உடுத்த உடையுடன் அகதியாக்கப்பட்டு ஒட்டு மொத்த வன்னி மாவட்ட மக்களின் உரிமைகளுக்காக ரசியல் செய்வதர்க்கு முன்வந்து இன்று நாட்டில் முஸ்லிம் மக்களின் தேசிய தலைவனாக மாறிவருக்கின்ற ஒரு தலைவனாக இருந்து வருக்கின்றார். அது மட்டுமால்லாமல் நிலழ் காலத்தில் முஸ்லிம்களி உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரே முஸ்லிம் அரசியல்வாதியாகவும் அவரே இருந்து வருக்கின்றார். 

 அந்த வகையிலே ரிசாட் பதுர்டீனினால் மட்டுமே மூதூர் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் அரசியல் ரீதியான நம்பிக்கை பிறக்க வாய்ப்பிறுக்கின்றது என்ற நம்பிக்கையுடன் ஒட்டு மொத்த மூதூர் மக்களும் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கொண்டேன்.

ஆகவே அமெரிக்காவில் இருந்து வந்துள்ள நான் மீண்டும் மூதூர் மக்களுக்காவும், திருகோணமலை மாவட்டத்தின் மக்களுக்காவும் அம்மக்களிலுடைய அரசியல் அபிலாசைகள், உரிமைகள் வென்றெடுபதறெடுக்கப்பட வேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டு சிறந்த அரசியல் தலைமைத்துவம் அகில இலங்கை மக்கள் காக்கிரஸ் மூலமாகவே திருக்கோணமலையில் உறுவாக்கப்பட்ட வேண்டும் என்பதற்காக எனது எதிர்கால அரசியலினை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாட்பதுர்டீனே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மூதூர் பிரதேச அரசியல் தலைமையுமான திடீர் தெளபீக் 14.08.2015 வெள்ளிக் கிழமை இடம் பெற்ற அவருடனான நேர்காணலின் பொழுது தெரிவித்தார். திடீர் தெளபீக்குடனா முழுமையான நேர்காணலின் காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -