நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒழுக்க விதிமுறைகளுக்கமைய தமது சத்தியப் பிரமாணத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மேற்கொண்டார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் அரங்கில் இடம்பெற்ற இந்த சத்தியப் பிரமாணத்தினை அதன் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் முன்னிலையில் அவர் மேற்கொண்டார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏறாவூரில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றின்போதும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இதேபோல் ஒரு சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


