நஸீரின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில்: மீனோடைக்கட்டு ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு 10 இலட்சம் நிதிஒதுக்கீடு!


அபு அலா –
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் 2015 ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் மீனோடைக்கட்டு மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆப் பள்ளிவாயல் கலாச்சார மண்டப நிர்மானப் பணியை மேற்கொள்வதற்கு ரூபா 10 இலட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பள்ளிவாயலின் செயலாளர் எம்.ஏ.அஷ்ரப் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவித்தார்.

மீனோடைக்கட்டு மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினர் பள்ளிவாயல் கலாச்சார மண்டப நிர்மானப் பணியை முன்னெடுப்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்கவே இந்த நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்த கலாச்சார மண்டப நிர்மானப் பணி தற்போது இடம்பெற்று வருவதாகவும் பள்ளிவாயலின் செயலாளர் எம்.ஏ.அஷ்ரப் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இயங்கிவரும் தொற்றா நோய் பிரிவுக்கு தளபாட கொள்வனவு செய்வதற்காக ரூபா 1 இலட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் இயங்கி வரும் தொற்றா நோய் பிரிவுக்கு சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக வெளி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து அங்குள்ள தளபாடங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. 

இக்குறைபாட்டை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நஸீரிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்கவே ரூபா 1 இலட்சம் நிதி தொற்றாநோய் பிரிவு தளபாட கொள்வனவு செய்வதற்காகவேண்டி கிடைக்கப் பெற்பெற்றுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -