தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் - ஜனாதிபதிக்கு முழு அதிகாரம்

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்றல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதியின் தலைமையில் கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் புதிய செயலாளராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது மத்திய குழுக் கூட்டம் இதுவாகும். அத்துடன் இந்தக் கூட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மத்திய குழு உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.

தேசிய அரசாங்கம் அமைத்தல், அதில் பெற்றுக்கொள்ள வேண்டிய அமைச்சுப் பொறுப்புகள், அவை வழங்கப்பட வேண்டிய நபர்கள், என்பன குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் குறித்தும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சுதந்திரக் கட்சி மத்திய குழுவினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொள்வதற்கும் சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இணக்கம் காணப்பட்டுளளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -